districts

ஊராட்சித் தலைவிக்கு தீண்டாமை கொடுமை குற்றவாளிகளை கைது செய்யாமல் இருக்கும் காவல்துறை

கரூர், செப்.25 - கரூர் மாவட்டம் கரூர் ஊராட்சி ஒன்றி யத்துக்கு உட்பட்ட நன்னியூர் ஊராட்சியில் தலைவர், துணைத் தலைவர் உட்பட 10  உறுப்பினர்கள் உள்ளனர். இதில் திமுக வைச் சேர்ந்த 5 உறுப்பினர்கள் மற்றும் அதிமுகவை சேர்ந்த 5 உறுப்பினர்கள் என சம நிலையில் உள்ளனர். நன்னியூர் ஊராட்சி தலைவராக உள்ள சுதாமுருகேசன் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர். இவரை கடந்த ஓராண்டாக ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணி செய்ய விடாமல், 9-வது வார்டு உறுப்பி னர் நல்லுசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற  தலைவர் குமாரசாமி, ஊராட்சி செயலாளர் நளினி, நளினியின் கணவர் மூர்த்தி ஆகியோர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சாதிய பாகுபாட்டுடன் பல்வேறு இடையூறு களை செய்து வந்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி 75 ஆவது  சுதந்திர தின கொடியேற்று விழாவில் பட்டி யல் வகுப்பு ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ள பகுதிகளில் மனித உரிமைகள் கூட்ட மைப்பின் ஒருங்கிணைப்பாளர் மதுரா வள்ளி  தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு வினர் நன்னியூர் ஊராட்சியில் எந்தெந்த வடிவில் தீண்டாமை வன்கொடுமை உள்ளது  என ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட உண்மை கண்டறியும் குழு அறிக்கையின் படி, கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் செப்டம்பர் 22 ஆம் தேதி நன்னியூர் ஊராட்சி யில் விசாரணை மேற்கொண்டார்.  

மாவட்ட  ஆட்சியரின் இந்த விசாரணை மூலம், ஊராட்சி மன்ற தலைவருக்கு பல்வேறு இடை யூறுகள் இருப்பதை உறுதி செய்து கொண்ட னர்.  பின்னர், நன்னியூர் ஊராட்சியில் தீண்டாமை வன்கொடுமை இருப்பது குறித்து  வாங்கல் காவல் நிலையத்தில் செப்டம்பர் 22ம் தேதி மாலை புகார் மனு ஒன்றை ஊராட்சி மன்ற தலைவர் சுதா முருகேசன் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர் விஜய லட்சுமி ஆகியோர் அளித்துள்ளனர். அதில், “ஊராட்சி மன்றத் தலைவராக எனது கடமையை செய்யவிடாமல் குறுக்கீடு  செய்து, மன உளைச்சலை ஏற்படுத்தியும், சாதிய ரீதியில் தீண்டாமை கொடுமைகள் செய்து வரும் 9-வது வார்டு உறுப்பினர் நல்லு சாமி (அதிமுக) மற்றும் ஊராட்சி மன்ற  அலுவலகத்தில் அடிக்கடி வந்து அலுவலகப்  பணி செய்வதில் இடையூறு ஏற்படுத்தி வரும்  முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குமார சாமி மற்றும் அலுவலகப் பணியில் ஒத்து ழைப்பு கொடுக்காத ஊராட்சி செயலர் நளினி  மற்றும் அவருடைய கணவர் மூர்த்தி ஆகி யோர், தேவையில்லாமல் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குள் வந்து, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் என்று கூறிக்கொண்டு ஊதியம் கேட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட பிற்படுத் தப்பட்ட வகுப்பை சேர்ந்த நபர்களின் மீது நட வடிக்கை எடுக்குமாறு” புகார் மனு கொடுத்துள்ளார். இதுகுறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொண்டபோது, நன்னியூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலர் லீலாகுமார் (தணிக்கை) மற்றும் கரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) விஜய லட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் உடனி ருந்தனர்.  

இதனிடையே செப்டம்பர் 24 ஆம் தேதி  மாலை பல்வேறு அமைப்புகள் வலியுறுத்திய தின் அடிப்படையில், வாங்கல் காவல்துறை எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ்  நல்லுசாமி, குமாரசாமி, நளினி, மூர்த்தி ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் ஊராட்சி செய லாளர் நளினி தற்காலிக பணி நீக்கம் செய்யப் பட்டுள்ளதாக கரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஆனால் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4  பேரும் சாதி ஆதிக்கத்தினர் என்பதால், அவர் கள் தலைமறைவாக உள்ளதாக கூறி,  வாங்கல் போலீசார் இதுவரை கைது செய்யா மல் அலட்சியம் காட்டி வருகின்றனர். மேலும்,  நன்னியூர் ஊராட்சி மன்ற தலைவர் சுதா  முருகேசன், பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்  என்பதால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது.  எனவே அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.  தீண்டாமை எந்த வடிவத்தில் இருந்தா லும், அதனை தமிழக அரசு ஏற்காது என்பதை  உறுதி செய்யும் வகையில், குற்றவாளி களுக்கு தண்டனை பெற்றுத் தர விசாரணை  நடத்தி, உரிய ஆதாரங்கள், சாட்சியங்களு டன் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்  தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

;