கடலூர் வண்டிபாளையம் மாநகராட்சி பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் துறை அமைச்சர் சி.வே.கணேசன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.ஐயப்பன், தி.வேல்முருகன், எம்.ஆர்.ராதாகிருஷ்ணன், சபா.ராேஜந்திரன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.