districts

img

என்சிசி மாணவர்களின் கடல் சாகச பயணம்

கடலூர், ஜூன் 8 - என்சிசி மாணவர்களின் கடல் சாகச பயணத்தின் இரண்டாம் நாளில் கடலூரில் காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இப்பயணம் கடலூர் துறைமுகத்தில் சனிக்கிழமை காவல்துறை கண்காணிப்பா ளர் ராஜாராம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

புதுச்சேரியில் இருந்து கடல் படகோட்டம் புறப்பட்டு, கடலூரில் வந்தடைந்தது. இளைஞர்களிடையே சாகச உணர்வை வளர்ப்பதற்கும், நமது கடல் சூழலைப் பாதுகாப்பதற்கும், நிலையான நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும் “உலகப் பெருங்கடல் தினத்தை” நினைவு கூரும் வகையில் இந்த பயணம் இருக்கும் என்று என்சிசி அதிகாரிகள் தெரிவித்தனர். புதுச்சேரி முதல் காரைக்கால் வரை என்சிசி மாணவர்களின் பாய்மர படகு பயணத்தில் திருச்சி, கடலூர், மயிலாடு துறை, புதுச்சேரி, காரைக்கால், மாவட்டங்களை சேர்ந்த சுமார் 70 என்சிசி மாணவர்கள் குழுவாக இந்த பாய்மர படகு பயணம் மேற்கொள்கின்றனர்.

இந்தக் குழுவினர் புதுச்சேரியில் இருந்து காரைக்கால் வரை சென்று மீண்டும் காரைக்காலில் இருந்து புதுச்சேரி வரை சுமார் 500 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் மேற்கொள்கின்றனர்.  இந்த நிகழ்ச்சியில் கடலூர் துணைக் கண்காணிப்பாளர் பிரபு, கடலோர காவல் படை காவல் ஆய்வாளர் பத்மா, முதுநகர் ஆய்வாளர் ரேவதி, கடலோர காவல் படை உதவி ஆய்வாளர் பிரபாகரன், தமிழ்நாடு தேசிய மாணவர் படை கட்டளை அதி காரி அருள் நாட், லெப்டினன்ட் கமாண்டர் லோகேஷ், மற்றும் தேசிய மாணவர் படை இணை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.