கடலூர், ஜன. 24- தொடர்மழையால் பாதிக்கப்பட்ட விவ சாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேப்பூர் வட்டச் செயலாளர் வீ.சிவ ஞானம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் செயற்குழு உறுப்பினர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன், வட்டக் குழு உறுப்பி னர்கள் ஏ.சாமிதுரை, பொன்.சோமு, ஜி.வேல்முருகன், டி.கருப்பையா, டி.ரத்தின சாமி, எஸ்.இளையராஜா, என்.மணிவாசகம், கே..செல்வி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் கிளைச் செயலாளர்கள் கே.முத்துசாமி, கே.சந்திரன், இ.ராஜ்குமார், எம்.பெரியசாமி, ஆர்.இளையராஜா, எஸ்.அஜித்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர், செவிலியர்களை நியமனம் செய்து தரமான சிகிச்சை வழங்க வேண்டும், வேப்பூர் வட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை பணியை துரிதப்படுத்தி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும், பேருந்து நிலையத்தை கட்டித்தர வேண்டும், வனப்பகுதி அருகில் அமைந்துள்ள சுமார் 2,509 எக்டேர் விவசாய நிலங்களில் காட்டுப்பன்றி, மான் போன்ற விலங்குகள் பயிர்களை அழித்து விடுகிறது. அதனால் வேளாண்மை துறை சார்பாக பெரிய அகழி அமைத்து பயிர் சேதத்தை தடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.