districts

img

பண்ருட்டி: 15 ஆம் நூற்றாண்டு செப்பு நாணயங்கள் கண்டெடுப்பு

கடலூர்,மே 16- பண்ருட்டி அருகே 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜய நகர காலத்தில் பயன்படுத்திய செப்பு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த உளுந்தம்பட்டு மற்றும் தளவானூர் தென்பெண்ணையாற்றில் விழுப்புரத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் மேற்புற கள ஆய்வு  மேற்கொண்டனர். அப்பொழுது பழங்கால இரண்டு செப்பு நாணயங்களை கண்டெடுத்தனர். இது குறித்து அவர்கள் கூறுகை யில், தென்பெண்ணை ஆற்றில் கண்டறிந்த இரண்டு செப்பு  நாணயங்களை ஆய்வு செய்ததில் அவை 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்த விஜய நகர காலத்தை சேர்ந்தது என்றும், நாணயத்தின் முன்பக்கத்தில் காளையின் உருவமும், பின்பக்கத்தில் தெலுங்கு எழுத்தில் தேவராயர் என்று எழுதப்பட்டுள்ளது என்று கூறினர். மேலும் பலமுறை தென்பெண்ணை ஆற்று படுக்கை யில் ஏற்கெனவே செப்பு நாணயங்கள் மற்றும் தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.  தென்பெண்ணை ஆற்றங்கரை பகுதிகளில் சங்ககாலம் முதல்  விஜய நகரம் வரை பழங்கால மக்கள் வாழ்ந்த தற்கான தொல்லியல் தடயங்கள் கண்டறியப்பட்டு வரு கின்றன.  தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் பழங்கால மக்களின் வாழ்விடமாகவும் வரலாற்று சிறப்பு மிக்க நகரங்களாகவும் இருந்திருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

;