வெள்ளி, பிப்ரவரி 26, 2021

districts

ஈரோட்டில் விவசாயிகளின் வாகனப் பேரணி தொழிலாளர்கள் திரளாக பங்கேற்க தொழிற்சங்கங்கள் அழைப்பு

ஈரோடு, ஜன.23- ஈரோடு மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று தேசியக்கொடிகளுடன் விவசாயிகள் நடத்தும் வாகனப் பேர ணியில் அனைத்துச் சங்கத் தொழி லாளர்கள் திரளாகப் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் அண் மையில் நடைபெற்றது. இதில், ஏஐடி யுசி மாவட்டத் தலைவர் எஸ்.சின்ன சாமி, சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ். சுப்ரமணியன், ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் கே.ஆர்.தங்கராஜ், எச்எம் எஸ் மாவட்டச் செயலாளர் பி.சண்மு கம், எல்பிஎப் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், எம்எல்எப் மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.காளியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு: விவசா யிகள் விரோத வேளாண் சட்டங் களைத் உடனடியாகத் திரும்பப்பெற வலியுறுத்தி தில்லியில் கடந்த இரண்டு மாதங்களாக அரசின் கடுமையான அடக்குமுறைகளையும் மீறி, கடுங் குளிரில் விவசாயிகள் போராடி வருகின்றனர்.

மேலும், இப்போராட் டத்தின் ஒருபகுதியாக, அகில விவசாய சங்கங்களின் போராட்ட ஒருங் கிணைப்புக் குழுவின் சார்பில் ஜன வரி-26 குடியரசு தினத்தன்று ஈரோடு மாவட்டத்தில் ஐந்து முனைகளில் இருந்து தேசியக் கொடிகளுடன் வாக னப் பேரணி புறப்பட்டு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அடைந்து அங்கு உறுதிமொழி ஏற்ப தென முடிவு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளின் இப்போராட்டத் திற்கு அனைத்து தொழிற்சங்கங்களும் ஆதரவை தெரிவித்துக் கொள்வ துடன், தொழிலாளர்கள் விரோத சட்டத் தொகுப்புகளையும் உடனடி யாக திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விவசாயி களின் பேரணியில் ஈரோடு மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் திரளான தொழிலாளர்களைப் பங் கேற்க செய்வதென முடிவு செய்யப் பட்டது. மேலும், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒற்றுமையை  வலுப்படுத்தி கோரிக்கைகள் நிறை வேறும் வரை தொடர் நடவடிக்கை களை மேற்கொள்வதென்றும் கூட் டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

;