court

img

அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் மனு: ஏப்ரல் 15 அன்று விசாரணை

தில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமின் மனுவை வரும் ஏப்ரல் 25-ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. 
மதுபான கொள்கை வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ஆம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவரது காவல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு திஹார் சிறையில் இருக்கிறார். கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி தில்லி உயர்நீதிமன்றம் அவரது ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. 
இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமின் மனுவை வரும் ஏப்ரல் 25-ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வழக்கை விசாரிக்கவுள்ளது.
 

;