பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, அந்த வாக்காளர்களின் முழு விவரங்களையும் மூன்று நாட்களுக்குள் டிஜிட்டல் வடிவில் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
வாக்காளர் நீக்க நடவடிக்கையில் சட்ட விரோதம் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், வெளிப்படைத்தன்மைக்காக நீக்கப்பட்டவர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்களை ஆன்லைனில் பொதுமக்கள் பார்க்கும் வகையில் வெளியிட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும், நீக்கப்பட்ட வாக்காளர்களுக்கு மீண்டும் புகார் அளித்து பெயரை சேர்க்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.