மதுரை மாநகராட்சி சொத்து வரி மோசடி புகார்களை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மதுரை மாநகராட்சியில் சில கட்டடங்களுக்கு வணிக வரிக்குப் பதிலாகக் குடியிருப்பு வரியாக மாற்றி நிர்ணயம் செய்தும், குடியிருப்புக் கட்டடங்களுக்கு வரிக் குறைப்பு செய்ததும் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ள வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என கே.கே. ரமேஷ் என்பவர் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து வரும் நிலையிக். அதில் தலையிட விரும்பவில்லை என தெரிவித்த தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு, இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.