court

img

நீதிமன்றத்திற்கு தவறான தகவலை அளித்த சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

மதுரை, நவ.30-  கோகுல்ராஜ் கொலை வழக்கில் நீதி மன்றத்திற்கு தவறான தகவலை அளித்  ததாக சுவாதி மீது குற்றவியல் நீதிமன்ற  அவமதிப்பு வழக்கு பதிந்து நடவடிக்கை  எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்  தவர் கோகுல்ராஜ். தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர்  தன்னுடன் படித்த வேறு  சமூகத்தைச் சேர்ந்த   சுவாதியுடன் கடந்த  2015 ஜூன் 23ஆம் தேதி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு பேசிக் கொண்டி ருந்தார். இரவு ஆகியும் கோகுல்ராஜ் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் நாமக்கல்லில் தலை துண்டித்து கொல்லப்பட்டார். இந்த  கொலை வழக்கு தொடர்பாக தீரன்  சின்னமலை பேரவையைச் சேர்ந்த யுவ ராஜ் உள்ளிட்ட 15 பேரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்ட நீதி மன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு பின்னர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. 106  சாட்சிகளில் சுவாதி உள்ளிட்ட 72 சாட்சி கள் குறுக்கு விசாரணை செய்யப்பட்ட னர். இந்த வழக்கில் சங்கர், அருள்செந்  தில், செல்வகுமார், தங்கதுரை, சுரேஷ்  உள்ளிட்ட 5  பேர் விடுதலை செய்யப்பட்  டனர். யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் கொலையாளிகளாக அறிவித்து தீர்ப்ப ளிக்கப்பட்டது. யுவராஜுக்கு சாகும்  வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட் டது. 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்ட னையும், மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்ப ளித்தார்.

 இந்த தண்டனையை ரத்து செய்யக்  கோரி யுவராஜ், உள்ளிட்ட 10 பேரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.இதே போல கோகுல்ராஜின் தாயார் சித்ரா மற்றும் சிபிசிஐடி தரப்பில், இந்த  வழக்கில் சங்கர் உள்ளிட்ட  5 பேரையும்  விடுதலை செய்ததை எதிர்த்து மேல்  முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டி ருந்தது.நவம்பர் 24 அன்று உயர்நீதி மன்ற மதுரை கிளையில் நடைபெற்ற விசாரணையில், சாட்சி சுவாதியை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  நவம்பர் 25 ஆம் தேதி, சுவாதியை  காவல்துறையினர் உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவரி டம், 23.6.2015-இல் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் கேமரா வில் பதிவான காட்சி போடப்பட்டு, அந்தக் காட்சியில் இருக்கும்பெண் நீங்  கள் தானா? பக்கத்தில் இருப்பவர் யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்வி களை நீதிபதிகள் எழுப்பியிருந்தனர். வீடியோவில் இருக்கும் பெண் நான் இல்லை. அந்த ஆண் கோகுல்ராஜ் போல் தெரிகிறது. அதை உறுதியாகச்  சொல்ல முடியாது என்று பதிலளித்தி ருந்தார்.

வாழ்க்கைக்குத் தேவை சத்தியம், சாதியல்ல

இதையடுத்து நீதிபதிகள், ‘வாழ்க் கைக்குத் தேவை சத்தியம், நேர்மை, நீதி மட்டுமே சாதியல்ல. நீங்கள் பேசு வது அனைத்தும் உண்மையா என உங்  கள் குழந்தையிடம் கேளுங்கள். நீங்கள் பொய் கூறுகிறீர்கள். கடைசியாக உங்க ளுக்கு வாய்ப்பளிக்கிறோம். அன்றைய தினம் ஆஜராக வேண்டுமெனக்  கூறி, விசாரணையை நவம்பர் 30-ஆம்  தேதிக்கு ஒத்திவைத்தனர். அன்றைக்கா வது உண்மையைச் சொல்ல முயற்சி யுங்கள். அன்றும் இதே நிலை தொடர்ந்  தால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும்’ என அறிவுரை கூறி யிருந்தனர். இந்த நிலையில், மேல்முறையீடு மனு மீதான விசாரணை நீதிபதிகள்  எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த்வெங்க டேஷ் அமர்வில் புதனன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு சுவாதி, கடந்த  வாரம் அளித்திருந்த பதிலில் எந்தவித மான மாற்றமும் இல்லை என்று பதில ளித்தார். இதையடுத்து, தவறான தகவலை அளித்ததாகக் கூறி சுவாதி மீது குற்ற வியல் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின்  கீழ் நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்த ரவிட்டனர்.

நீதிபதிகள் உத்தரவு

நவம்பர் 30 புதனன்று சத்திய பிர மாணம் எடுத்த பின்னர், 25ஆம் தேதி குறிப்பிட்ட வாக்குமூலத்தில் மாற்றம் ஏதும் உள்ளதா? வேறு ஏதேனும் சொல்ல  விரும்புகிறீர்களா? என கேள்வி எழுப் பிய போது, சுவாதி இல்லை என தெரி வித்து விட்டார். ஆகவே, “வழக்கு விசாரணை பொரு  ளுள்ளதாக அமைய வேண்டும். அத னடிப்படையில் சாட்சிகள் சேகரிக்கப் பட்டு, விசாரணை நடைபெற வேண் டும். அதில் சாட்சிகள் உண்மையைச் சொல்ல வேண்டும். அதற்காகவே சத்தியப்பிரமாணம் பெறப்படுகிறது.  சில நேரங்களில் உயர்நீதிமன்றங்க ளில் தவறான தகவலை அளிப்பதை ஏற்க இயலாது. அதுவும் சத்திய பிர மாணம் செய்தபின், தவறான தகவலை அளிப்பவர்களை எளிதாக கடந்து  சென்று விட இயலாது.  துரதிஷ்டவச மாக, பல வழக்குகளில் அவ்வாறு நடந்துவிடுகிறது. இந்த வழக்கிலும், நீதித்துறை நடு வர் முன்பாக சத்தியப்பிரமாணம் செய்த  பின் சுவாதி 20.12.18 இல் அளித்த வாக்கு மூலத்திற்கு பின் வழக்கு விசாரணை நக ராமலேயே இருந்துள்ளது. இது போல  பல வழக்குகள் நல்லடக்கம் செய்யப் பட்டுள்ளன. 

இந்த வழக்கை பொறுத்தவரை தவ றான தகவலை அளித்ததற்காக சுவாதி  மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க இயலுமா? என கேள்வி எழுகிறது.  அதற்கு பதிலளிக்கும் விதமாக உச்ச நீதிமன்றத்தின் பல உத்தரவுகள் உள்  ளன.  இந்த வழக்கை பொறுத்தவரை, சாட்சி சுவாதி, நீதித்துறை நடுவர் முன்  பாக கூறிய வாக்குமூலத்திலிருந்து முற்  றிலுமாக மாறுபட்ட தகவலைக் கூறு கிறார். அவர் கல்வியறிவு அற்றவர் அல்ல.  அவர் எல்லா கேள்விகளுக்கும்  பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என நன்கு தெரிந்தும் வாக்கு மூலத்தை அளித்துள்ளார். அவரது சாட்சியம் இந்த வழக்கில் மிக முக்கிய மானது. அவரை சந்தித்ததன் காரணமா கவே கோகுல்ராஜ் கொலை செய்யப் பட்டுள்ளார். கீழமை நீதிமன்ற விசார ணையின் போது அதற்கான சாட்சி களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. சுவாதி அழுத்தத்தின் காரணமாக வாக்குமூலம் கொடுத்திருந்தால், அதனை நீதித்துறை நடுவரிடம் தெரி வித்திருக்கலாம்.  தற்போது அதற்கு மாற்றாக தக வலை கூறும் போது அதற்கான காரணத்  தையாவது குறிப்பிடலாம். 

இந்த நீதிமன்றமும், சத்தியப்பிர மாணம் எடுத்த பின் அளித்த வாக்கு மூலத்திலிருந்து ஏன் மாறுபடுகிறார் என அறிய விரும்பியது. அதற்கான அவ காசத்தையும் வழங்கியது. சுவாதி இந்த  வழக்கின் நட்சத்திர சாட்சி. ஆகவே,  நாங்கள் சுவாதியின் சாட்சியை முற்றிலு மாக தவிர்க்க விரும்பவில்லை. நீதியை காக்கும் பொருட்டு, இந்த நீதிமன்றத் தின் அதிகாரத்தை பயன்படுத்தி அவரை விசாரித்தோம். சிசிடிவி காட்சிகளை ஒளிபரப்பி, அதிலிருப்பவர் யார் என கேட்டதற்கு, தான் இல்லை என தெரிவித்து விட்டார். அந்த காட்சிகளைப் பார்க்கும் போது  அது அவர் தான் என தெரியவருகிறது. இருப்பினும் சுவாதி அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. கோகுல்ராஜை அடையாளம் கண்ட சுவாதிக்கு தன்னை அடையாளம் தெரியவில்லை என்பது   ஆச்சரியமளிக்கிறது. அவர் நீதிமன்றத்  திற்கு தவறான தகவலை அளித்துள்  ளார். அவருக்கு எந்த அழுத்தமும்  இல்லை. யாரும் அழுத்தம் கொடுக்க வில்லை என தெரிவித்துள்ளார். எல்லா வற்றையும் நன்கு புரிந்து கொண்ட பின்  னரே தவறான தகவலை அளித்துள் ளார். 

நீதித்துறை நடுவர் முன்பு அளித்த  தகவல் உண்மையில்லை என்றால்  அவர் அவரிடம் தவறான தகவலை அளித்ததாக கருதப்படும். விசாரணை நீதிமன்றத்தில் அவர் சொன்ன தகவல்  உண்மையில்லை என்றால் அங்கும் அவர் தவறான தகவல் அளித்ததாகக் கருதப்படும். அவருக்கு மறு வாய்ப்பு  அளிக்கும் வகையில் இந்த நீதிமன்றம்  வாய்ப்பளித்தும், உண்மையை தெரி விக்கவில்லை. இந்த நீதிமன்றம் கண் டும் காணாமல் இதனை கடந்து செல்ல இயலாது. ஆகவே மேற்கொண்ட காரணங்களைக் கருத்தில் கொண்டு, நீதிமன்றத்தில் தவறான தகவலை அளித்ததற்கான முகாந்திரம் இருப்பது தெரியவருகிறது.ஆகவே, சுவாதி மீது  குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நட வடிக்கை எடுக்க உத்தரவிடப்படுகிறது.

வழக்கறிஞர் ப.பா.மோகன் 

கோகுல்ராஜ் தரப்பில் ஆஜரான  வழக்கறிஞர் ப.பா.மோகன் நமது செய்தியாளரிடம் பேசுகையில், சாட்சி  பிறண்டாலும் சாட்சியம் பொய் சொல்  லாது. கோகுல்ராஜ் வழக்கில் முக்கிய சாட்சியம் சுவாதி-கோகுல்ராஜ் இரு வரும் சந்தித்து பேசிக்கொண்டதுதான். நாமக்கல் நீதிமன்றத்தில் இதை ஒப்புக்  கொண்ட சுவாதி சென்னை உயர்நீதி மன்றத்தில் பிறழ்ந்து பேசினார். நீதிமன் றம் கொடுத்த கடைசி வாய்ப்பையும் அவர் தவறவிட்டுவிட்டதால் தற்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு உத்தர விடப்பட்டுள்ளது. தற்போது தண்டிக்கப்பட்டுள்ள 10  குற்றவாளிகள் மூலம் 26 குற்றச்சாட்டு கள் பதிவு செய்யப்பட்டன. இதில் பலர்  குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப் பட்டுள்ளனர். குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரம் உள்ளது. இந்த குற்றங்களை ஆதாரப்பூர்வமாக நிரூ பிப்போம். இதுதவிர மதுரை சிறப்பு நீதி மன்றத்தால் விடுவிக்கப்பட்ட ஐந்து பேர்  விடுதலையை எதிர்த்து மேல்முறை யீடு செய்துள்ளோம் என்று தெரி வித்தார்.
 

 

;