court

img

அன்னைத் தமிழ் அர்ச்சனை திட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு....  

சென்னை:
 அன்னை தமிழ் அர்ச்சனை திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 47 கோயில்களில் ‘அன்னை தமிழில் அர்ச்சனை’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தமிழில் அர்ச்சனை செய்யும்திட்டத்தை எதிர்த்து ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜ நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல்செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணைதலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது.

கோயில்களில் விதிக்கப்படும் ஆகம விதிகளின்படிதான் அர்ச்சனை செய்ய வேண்டும். மத காரியங்களை செய்ய வேண்டும்.இத்தகைய மத விவகாரங்களில் அரசு தலையிடக் கூடாது என்று ரங்கராஜ நரசிம்மன் தரப்பில் தெரிவிக்கப்பட்டதுஇதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்பது பக்தர்களின் விருப்பத்திற்கு உட்பட்டது என்று 2008 ஆம் ஆண்டு வேறு ஒரு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதை சுட்டிக்காட்டி ‘ அன்னை தமிழ் அர்ச்சனை திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்றும்  குறிப்பிட்ட மொழியில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என நீதிமன்றம் வற்புறுத்த முடியாது. அன்னை தமிழில் அர்ச்சனை திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரிய மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.