court

img

வன்னியர் உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு தடை கோரி  உயர்நீதிமன்றத்தில் மனு...

சென்னை:
வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவிற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி பிப்ரவரி 26ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் தற்காலிக சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.இதனை எதிர்த்து, தென்நாடு மக்கள் கட்சி நிறுவனர் கணேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள 20 சதவீதம் இட ஒதுக்கீட்டில் வன்னியர், வன்னிய கவுண்டர், வன்னிய குல ஷத்திரியர் என ஏழு பிரிவினருக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி சட்ட மசோதா இயற்றப்பட்டுள்ளதாகவும் சாதிவாரி மக்கள் கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கி உள்ளதால், ஆறு மாதங்களுக்குத் தற்காலிகமாக இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படுவதாக அந்தச் சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ளதாகவும், சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்காமல் எப்படி இயற்றப்பட்டது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் லாபத்திற்காக இந்தச் சட்ட மசோதா இயற்றப்பட்டுள்ள
தாகவும் இதன் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.