மதுரை:
மதுரை விமானநிலை யத்தில் ஓடுதள விரிவாக்கப்பணி மற்றும் குளிர்சாதன சேமிப்புக் கிடங்கு வசதி செய்து தரக்கோரும் வழக்கில் மத்திய விமான போக்குவரத்துத் துறை செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு தொழில் மற்றும் வர்த்தகத் துறை தலைவர் என்.ஜெகதீசன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “மதுரை மாவட்ட மக்கள் தொகை 18 லட்சமாக இருந்து வருகிறது. மதுரையை நம்பி 16 மாவட்டங்கள் உள்ளன. மதுரை விமானநிலையம் இந்தியாவில் 32-ஆவது பரபரப்பான விமானநிலையம். மதுரை விமானநிலையத்தில் இருந்து இலங்கை, துபாய், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு விமானச் சேவை நடைபெற்று வருகிறது.மதுரை விமான நிலையஓடுதளத்தை 7,500 அடியிலிருந்து 12,000 அடியாக விரிவாக்கம் செய்ய 12 வருடத்திற்கு முன்பு அறிவிப்பு வெளியாகியது. ஆனால் ஓடுதளவிரிவாக்க செய்யும் இடத்தில்தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இது மதுரையி லிருந்து கேரளா, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களுக்குச் செல்லக்கூடிய முக்கிய வழித்தடமாக உள்ளது. இதனால்அப்பகுதியில் வாரணாசி விமான நிலையம் போல் விமான ஓடுதளம் மேம்பாலம் அமைப்பதற்கான ஆய்வுகள்நடத்தப்பட்டது. அதன் பின்பு எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.மதுரை விமான நிலையத்தில் இருந்து 80 சதவீதம்விவசாயம் சார்ந்த பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படு கிறது. இதற்காக மதுரை விமான நிலையத்தில் தனியாக குளிர்சாதன சேமிப்புக் கிடங்கு அமைக்கக் கோரி மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.மதுரை விமானநிலை யத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்து வதன் மூலம் அதிகமான பயணிகள், ஏற்றுமதி செய்யும் விவசாயிகள் பயன் அடைவார்கள்.ஆனால், மதுரை விமானநிலைய ஓடுதள விரிவாக்கப் பணி, குளிர்சாதன சேமிப்புக்கிடங்கு அமைக்க அதிகாரி களுக்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.எனவே மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளவும் குளிர்சாதன சேமிப்புக் கிடங்கு வசதி உருவாக்கவும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கூறியிருந் தார்.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு வியாழனன்று விசாரணைக்கு வந்தது.அப்போது மத்திய அரசுத் தரப்பில் விமான நிலையம் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து இந்திய விமான நிலைய இயக்குநரகம் முடிவு எடுக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது.இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் மத்திய விமான போக்குவரத்துத் துறை செயலர் பதிலளிக்கஉத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் மாதத்திற்கு ஒத்தி வைத்தனர்.