வக்பு சட்டத் திருத்தத்திற்கு எதிரான வழக்கில் இடைக்கால உத்தரவுகள் அனைத்தும் நாளை (17-04-2025) வரை நிறுத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி நாடாளுமன்ற இரு அவைகளிலும் 2 வாரத்திற்கு முன்பு முஸ்லிம் மக்களை ஒடுக்கும் நோக்கத்தில் வக்பு வாரிய திருத்த மசோதாவை மோடி அரசு நிறைவேற்றியது. இந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்த நிலையில், மசோதா சட்டமாக மாறியது. இந்நிலையில், வக்பு சட்டத்திருத்தத்திற்கு எதிராக 100க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்குகள் இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார் மற்றும் நீதிபதி கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது "இந்து அறக்கட்டளைகளில் இந்துக்கள் அல்லாதோர் உள்ளனரா? வக்பு சொத்தை மாவட்ட ஆட்சியர் முடிவு செய்வது நியாயமானதா? ஏற்கனவே வக்பு என்று பதிந்த சொத்து புதிய சட்டத்தின்படி செல்லாதது என்று அறிவிக்கப்படுமா? வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை?" என ஒன்றிய அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர்.
வக்பு சட்டத்திருத்தத்திற்கு எதிராக தொடரப்பட்ட 100க்கும் மேற்பட்ட மனுக்கள் மீது ஒன்றிய அரசு பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதை வக்பு சட்டத் திருத்தத்திற்கு எதிரான வழக்கில் இடைக்கால உத்தரவுகள் அனைத்தும் நாளை (17-04-2025) வரை நிறுத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
நாளை மதியம் 2 மணி அளவில் விசாரணை நடைபெறும், பின்னர் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.