புதுதில்லி,அக்.04- லட்டு கலப்படம் தொடர்பான வழக்கினை விசாரிக்கச் சிறப்பு குழு ஒன்றை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.
திருப்பதி லட்டு வழக்கினை விசாரிக்க சிபிஐ இயக்குநர் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2 சிபிஐ அதிகாரிகள், 2 ஆந்திர மாநில காவலர்கள், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இக்குழுவில் இடம்பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தல்
லட்டு விவகாரத்தை அரசியல் போர்க்களமாகத் தொடர அனுமதிக்க முடியாது; கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வு மற்றும் நம்பிக்கையைக் கருத்தில் கொண்டு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளோம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.