புதுதில்லி:
தூத்துக்குடி ஸ்டெர் லைட் ஆலை வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர் லைட் ஆலைக்கு எதிராக போராட்டக்குழுவினர் பேரணி நடத்தினர். அப்போதுஅவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாயினர். இந்தசம்பவம் கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி நடந்தது. இதைத் தொடர்ந்து மே 28ஆம் தேதி ஸ்டெர்லைட்ஆலைக்கு சீல் வைக்கப் பட்டது.இதை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொட ர்ந்தது. பின்னர் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என்று உச்சநீதிமன்றம் வேதாந்தா நிறுவனத்துக்கு தெரிவித்து இருந்தது. இதையடுத்து, ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கு பல மாதங் களாக விசாரிக்கப்பட்டு வருகிறது. எனவே, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசு மற்றும் மதிமுக தலைவர் வைகோ உச்சநீதி மன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், ஸ்டெர்லைட் ஆலை மேல்முறையீடு செய்தால் தங்களது ஆலோசனையை கேட்காமல் எந்த முடிவை யும் எடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதனிடையே ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பான வழக்கை அவசர வழக்காக ஏப்ரல் முதல்வாரத்தில் விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்பு வேதாந்தா நிறுவனம் தரப்பில் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கை ஆகஸ்ட் மாதம் விசாரிக்கிறோம் என்று தெரிவித்தனர்.