அரசு அனுமதிக்காத எந்த பணிகளையும் அனுமதிக்க முடியாது என ஸ்டெர்லைட் வழக்கினை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து நச்ச்ய்ப்பொருட்கள் வெளியேற்றப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு பொதுமக்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டுமென்று நீண்ட நாட்கள் போரட்டம் நடத்தியும் எந்த பதிலும் இல்லாததால் மே 22 2018 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போரட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தில் 17 வயது பெண் உட்பட 13 பேர் காவல்துறையினரால் சுட்டு கொல்லப்பட்டனர்.
அதன்பின் ஆலையை நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது. ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆலையை பராமரிப்பு காரணங்களுக்காக மீண்டும் திறக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு இன்று (ஏப்ரல் 10) விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசின் உயர்மட்ட குழு அனுமதி வழங்கியுள்ள கழிவுகளை நீக்க மட்டுமே ஸ்டெர்லைட் ஆலைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது.
அரசு அனுமதிக்காத எந்த பணிகளையும் அனுமதிக்க முடியாது என ஸ்டெர்லைட் வழக்கினை 3 வாரங்களுக்கு வழக்கை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.