புதுதில்லி:
கொரோனா மருந்துகளை சட்டவிரோதமாக பதுக்கியது தொடர்பாக பாஜக எம்.பி.யும் முன்னாள் கிரிக் கெட் வீரருமான கவுதம் கம்பீர் மீதுதொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2021 ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா 2-ஆவது அலை தீவிரமாக இருந்த நேரத்தில், கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் பேபிபுளூ (Fabiflu) என்ற மருந்திற்கு கடும்தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. ஆனால்,
மருத்துவமனைகளுக்கே கிடைக் காத மருந்து, பாஜக எம்.பி. கம்பீருக்குச் சொந்தமான அறக்கட்டளையில் மட்டும் தாராளமாக கிடைத்தது. இதுதொடர்பாக தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில், இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையமோ (Drugs Controller General of India - DCGI)பாஜக எம்.பி. கம்பீரை காப்பாற்றும்விதமாக அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால், அந்த அறிக்கையை ‘குப்பை’ என்று கடுமையாக விமர் சித்த நீதிமன்றம், புதிய அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. அதன்படி கம்பீரின் குற்றம் உறுதிசெய்யப்பட்டு உள்ளதாக புதிய அறிக்கையில் டிசிஜிஐ தெரிவித்தது.இதனிடையே, தன் மீதும், தனதுஅறக்கட்டளை மீதும் விசாரணை நடத்துவதற்கு தடை விதிக்கக் கோரிகவுதம் கம்பீர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்குநீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆர்.ஷா அமர்வு முன்பு திங்களன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, கம்பீரின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்ட நீதிபதிகள், “நாட்டில் மருந்திற்குத் தட்டுப்பாடு நிலவி வந்த போது, தனிநபரோ அல்லது அறக்கட்டளையோ மருந்துகளைக் கொள்முதல் செய்து விநியோகிக்க அனுமதிக்க முடியாது” என்று கூறி விட்டனர். மேலும், அவ் வாறு தனிநபர் ஒருவரை மருந்தை விநியோகிக்க அனுமதித்தால், பிறகு இதேபோல அனைவரும் தங்கள் சொந்த நலனுக்காக மருந்துகளைக் கொள்முதல் செய்து விற்பனை செய்யத் தொடங்கி விடுவார்கள்” என்று கூறிய நீதிபதிகள், எனவே, இது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகளைத் தடுக்கப் போவதில்லை என்று தீர்ப்பளித்தனர். தேவைப்பட்டால் கம்பீர் தில்லி உயர்நீதிமன்றத்தை நாடுமாறும் அறிவுறுத்தினர். இதையடுத்து உச்ச நீதிமன்றத்திலிருந்து தனது மனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்ட கம்பீர், தில்லி உயர் நீதிமன்றத்தில் புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.