உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி பி.ஆர்.கவாய்யின் பெயரை தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பரிந்துரை செய்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் பதவிக்காலம் வரும் மே 13-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி பி.ஆர்.கவாய்யின் பெயரை தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பரிந்துரை செய்துள்ளார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கும் பட்சத்தில், உச்ச நீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக மே 14-ஆம் தேதி பி.ஆர்.கவாய் பொறுப்பேற்பார்.