court

img

சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 நிரந்தர நீதிபதிகள் பதவியேற்பு!

சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 நீதிபதிகள், நிரந்தர நீதிபதிகளாக இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி, சென்னை உயர்நீதிமன்றத்தில்,  கூடுதல் நீதிபதிகள் ஆர்.சக்திவேல், பி.தன்பால் ஆகிய இருவரும் நிரந்தர நீதிபதிகளாக  நியமிக்க பரிந்துரை செய்தது. இதை அடுத்து, இரு நீதிபதிகளுக்கு இன்று நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர். தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 65 ஆக உள்ளது.  அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகள் பணியிடங்களில் 10 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.