மதுரை,நவம்பர்.20- மதுரையை அடுத்துள்ள சின்ன உடைப்பு கிராம மக்களை வெளியேற்ற இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காகச் சின்ன உடைப்பு கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கையைத் தடுக்கக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு விசாரணையில் கிராம மக்களை வெளியேற்ற இடைக்காலத் தடை விதித்து சேனை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.