மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீதிபதி டி.கிருஷ்ணகுமாரின் பெயரை உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சித்தார்த் மிருதுள் வரும் 21-ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். இந்த நிலையில், மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.கிருஷ்ணகுமாரின் பெயரை இன்று உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
நீதிபதி டி.கிருஷ்ணகுமார் கடந்த 2016 ஆண்டு ஏப்ரல் 7 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். வரும் 2025-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி அவர் ஓய்வு பெற உள்ளார்.