சென்னை, ஜூலை 4- சென்னை செம்மொழிப் பூங்கா எதிரே ஆக்கிரமிப் பிலிருந்த ரூ.1,000 கோடி நிலத்தை அரசு கையகப் படுத்தியது செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள சாலையில் அரசுக்கு சொந்த மான நிலத்தில் அதிமுக பிரமுகரான தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி என்பவர், தோட்டக்கலை சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி அதனை பயன்படுத்தி வந்தார். அதை மீட்க கடந்த 1989 ஆம் ஆண்டு அரசு நடவடிக்கை எடுத்தது. இந்த நடவடிக்கைக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அந்த நிலம் அரசுக்கு சொந்த மானது என உறுதி செய்தது.
தோட்டக்கலை சங்கத்திற்கு எதிரே அமைந்திருந்த உணவக விடுதி ஆக்கிரமித்திருந்த நிலத்தை கையகப்படுத்தி தோட்டக்கலை சார்பில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டது. இந்த நிலத்திற்கு எதிரே 6.36 நிலத்திலிருந்த தோட்டக்கலை சங்கத்தை காலி செய்ய அரசு நடவடிக்கை மேற்கொண்ட தையடுத்து தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தோட்டக்கலை கிருஷ்ண மூர்த்தி மேல்முறையீடு செய்திருந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழ் நாடு அரசின் வருவாய்த் துறை அந்த இடத்தை கைய கப்படுத்தி, தமிழ்நாடு அரசு தோட்டக்கலை துறை வசம் ஒப்படைத்தது. இந்த ஒப்படைப்பு நடவடிக் கையை எதிர்த்து தோட்டக் கலை கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர்நீதி மன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் வரு வாய்த்துறை கையகப் படுத்திய நடவடிக்கையில் விதிமுறை மீறல் உள்ளதாக வும், முறையான நட வடிக்கை மேற்கொள்ளப் படவில்லை என்று குறிப் பிட்டிருந்தார். மேலும் அந்த நிலத்தை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டி ருந்தார். இந்த வழக்கு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜராக கூடுதல் தலைமை வழக்கறிஞர், அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு, நோட்டீஸ் வழங்கப் பட்டு தோட்டக்கலை சங்கத் திற்கு ஒப்படைக்கப்பட்டது என்ற வாதத்தை முன் வைத்தார். இந்த நிலையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தேதி குறிப் பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்து இருந்த நிலை யில், அந்த மனுவை தள்ளு படி செய்து, தோட்டக்கலை துறை சங்கம் சார்பில் வைக் கப்பட்டிருந்த நிலத்தை கையகப்படுத்தியது செல்லும் என தீர்ப்பு வழங்கி யுள்ளார்.