cinema

img

மதங்களின் செல்வாக்கு இன்னும் எவ்வளவு காலத்திற்கோ... - புதுவை இளங்கோ

ஜப்பானிய சினிமா /2016/ 160 நிமிடங்கள்

கி.பி.1540 இல் ரோம் நகரத்தில், மூன்றாம்  போப் பால் அனுமதியோடு அமைக்கப் பட்டது “சொசைட்டி ஆஃப் ஜீசஸ்” என்ற அமைப்பு.  இதன் உறுப்பினர்கள் “ஜேசுயிட்ஸ்” என்றழைக்கப் பட்டார்கள். கி.பி. 1500 களில் புதிய பூமியை தேடி ஐரோப்பியர்கள் போனதை தொடர்ந்து கிறித்த வத்தை உலகெங்கிலும் பரப்ப இந்த அமைப்பு திட்ட மிட்டது. 112 நாடுகளில் இயேசுவின் தொண்டர்கள் கால் பதித்து கிறித்தவத்தை பரப்ப துவங்கினார்கள். “ஜேசுயிட்ஸ்” என்பவர்கள் ஒருவகையில் “கடவு ளின் போர் வீரர்கள்” என்று அழைக்கப்பட்டனர்.  

காரணம், இயேசுவின் மகிமையை பரப்பிட உயிரை யும் துச்சமென மதித்து தீவிரமாக வேலை செய்தார்கள்  இவர்கள். கி.பி. 1600 களில் ஃபாதர் ஃபெரைரா என்பவர் ஜப்பானுக்குப் போனார். ஜப்பானில் கிறித்தவத்தைப்  பரப்பினார். முடியாட்சியாளர்களின் கவனத்துக்கு இந்தச் செய்தி போனது.  அவர்கள், ஃபாதர் ஃபெரை ராவின் செயல்களைத் தடை செய்தனர்.  எனினும் அவர் ஆட்சியாளர்களுக்கு தெரியாமல் ரகசியமாக பிரார்த்தனை கூட்டங்களை நடத்தி ஜப்பானியர்களை கிறித்தவர்களாக மாற்றிக் கொண்டிருந்தார். கடும் உழைப்பு, வறுமை, வரிகள் என்ற கொடுமைகளிலிருந்து விடுபட்டு இயேசுவின் “சொர்க்கத்தை” அடைய சில ஜப்பானியர்கள் கிறித்த வர்களாக மாறினார்கள். முடியாட்சியாளர் கள் கடும் கோபம் கொண்டு மதம் மாறியவர்களைக் கண்டுபிடித்து உயிரோடு எரிக்கவும், தூக்கிலிடவும் செய்தனர்.  

இந்த செய்திகள் ரோம் நகரத்திற்கு வந்தடை கிறது. ஃபாதர் ஃபெரைரா என்ன ஆனார்? என்று ரோமுக்கு தகவல் கிடைக்கவில்லை.  அவரை தேடிக் கண்டுபிடிப்பதோடு, ஜப்பானில் இயேசுவின் ராஜ்யத்தை உறுதியாக நிறுவுவோம் எனச் சூளுரைத்து காருப்பி, ரோடிரிக் என்ற இரண்டு கடவுளின் போர்வீரர்கள் கிளம்பி வருகிறார்கள்.  தைவான் கடற்கரையிலிருந்து, ஜப்பானின் மேற்கு  பகுதி கடற்கரை நகரமான நாகசாகி அருகே ஒரு கிராமத்துக்கு ரகசியமாக படகில் வந்தடைகிறார்கள். வறுமையில் வாடும் கிராம  விவசாயிகளுக்காக பிரார்த் தனைக்  கூட்டங்களை நடத்துகி றார்கள். தகவல் ஆட்சி யாளர்களுக்குப் போகிறது.

இருவரையும் கைது செய் கிறார்கள். காருப்பி, ரோடிரிக் இரு வரையும் நேரடியாகத் தண்டிக் காமல், ஜப்பானிய கிறித்தவர் களை பிடித்து வந்து, அவர்கள் முன்பாக சித்திரவதை  செய்கிறார்கள். காருப்பி, ரோடிரிக் இருவரும்  இயேசுவின் மீதான தங்கள் நம்பிக்கையை துறக்கும் படி மீண்டும் மீண்டும் வற்புறுத் தப்படுகிறார்கள். சித்திர வதைக்கு ஆளாகும் ஜப்பானியர் ஒருவரை காப்பாற்றப் போய் காருப்பி செத்துப் போகிறார்  . “எங்களுக்கு புத்தர் இருக்கிறார், எங்கள் மண்வேறு; கிறித்தவம் இங்கு முளைக்காது. இங்கு கிறித்த வத்திற்கு வேலையில்லை..”என்று வாதிடுகிறார்கள் ஜப்பானிய ஆட்சியாளர்கள். இயேசுவைத் துறந்து பவுத்தத் திற்கு மாறி விட்ட ஃபெரைரா வை சந்திக்கிறார் ரோடிரிக். ரோடிரிக்கும் பவுத்தத்திற்கு மாற வேண்டுமென ஃபெரைரா வலியுறுத்துகிறார். ரோடிரிக் என்ன முடிவெடுக்கிறார் என்பது படத்தின் இறுதி. சுசாக்கு எண்டோ என்கிற ஜப்பா னிய கிறித்தவரின் நாவல் படமாகி யுள்ளது. நாவல் புனைவு என்கிறார்கள். ஆனால் நமக்கு அப்படி தோணவில்லை. 

;