cinema

img

எம்.ஜி.ஆர். நடிக்கும் புதிய படம்...

மறைந்த எம்.ஜி.ஆருக்கு ஒரு கனவு இருந்தது. கடைசிவரை நிறைவேறாமலேயே போய்விட்ட அந்தக் கனவு பொன்னியின் செல்வன் சினிமாதான்.  அதன் வந்தியத்தேவன் மற்றும் அருண்மொழிவர்மன் பாத்திரங்களில் எம்.ஜி.ஆர். இப்போது இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்றால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.  ஆம்... இந்த பொன்னியின் செல்வன் திரைப்படமாகவும், 12 சீசன்களில் 153 எபிசோடுகள் கொண்ட வெப் சீரியலாகவும் தற்போது உருவாக இருக்கும் அனிமேஷன் படமான இதனை அஜய் பிரதீப் இயக்குகிறார். அந்தநாளின் ‘ஜெனோவா’  படத்தில் எம்.ஜி.ஆரின் ஜோடியாக நடித்த ஓமனாவின் மகன்தான் இந்த பிரதீப்.  இந்தப் புதுமையான முயற்சி ஐந்து மொழிகளில் தயாராகவுள்ளது. இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் இந்தப் படத்திற்கு இசையமைக்கப்போவது இளையராஜா!

;