cinema

img

கமல் செய்த உதவி - சோழ. நாகராஜன்

கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் விக்ரம் படத்தில் அவரே எழுதி, பாடியிருக்கும் ‘‘பத்தல பத்தல’’ பாடல் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வெளியாகியிருக்கிறது. தமிழில் மட்டும் 6 கோடிக்கும் அதிகமானவர்கள் இந்தப் பாடலை யூடியூபில் பார்த்துள்ளார்களாம்.  இதனிடையே இந்தப் பாடலை திருமூர்த்தி என்ற பார்வையற்ற மாற்றுத் திறனாளி ஒருவர் பாடி இணையத்தில் வெளியிட்டதும் வைரலாகியது. அதைப் பார்த்த கமல் அவரை அழைத்துப் பாராட்டியிருக்கிறார். திருமூர்த்தியிடம் அவரது விருப்பமென்ன என்று அவர் கேட்டபோது இசை பயிலவேண்டும் என்று கூறியிருக்கிறார்.  அதன்படி ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப்பள்ளியான கே.எம்.மியூசிக் கன்சர்வேட்டரியில் அவரைச் சேர்த்துவிட கமல்  கேட்க, ரஹ்மானும் அதற்கு ஒப்புதல் தந்துவிட்டார். திருமூர்த்தி இசை கற்றுக்கொள்ள ஆகும் முழுச் செலவையும் கமல்ஹாசனே ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

;