cinema

img

கருத்துத் திணிப்பு வேண்டாமே...

‘‘நான் குண்டாகிவிட்டேன், கருப்பாக இருக்கிறேன் என்றெல்லாம் சமூக வலைத் தளங்களில் எழுதுகிறார்கள். உண்மையில் நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே நம்மை விரும்புபவர்கள் 99 சதவீதம் பேர். வெறும் 1 சதம் பேர்தான் நான் குண்டாக இருக்கிறேன், கருப்பாக இருக்கிறேன் என்றெல்லாம் விமரிசிக்கிறவர்கள்.  இந்தத் தொழிலில் நீங்கள் எந்த நேரத்திலும் முதன்மையான வராகவும், சரியாகவும் இருக்க வேண்டியுள்ளது. உங்கள் உடல், தோல், முடி, நகங்களை நீங்கள் பராமரிக்க வேண்டும். இதைச் செய்வது மிகக்கடினமாக இருக்கிறது. ஆகவே, ஒரே ஒருநாளாவது நான் நானாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனக்குப் பிடித்ததைச் சாப்பிட விரும்புகிறேன். நான் அழகாக இருக்க விரும்பவில்லை. மக்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதே என் எண்ணம். நீங்கள் ஏதாவது நேர்மறையாகச் சொல்ல விரும்பினால் சொல்லுங்கள். இல்லாவிட்டால் உங்கள் கருத்துக்களை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். அதை மற்றவர்கள்மீது ஏன் திணிக்க முயல்கிறீர்கள்?’’