cinema

img

வில்லன் கமல்..? - சோழ. நாகராஜன்

பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் புராஜெக்ட் கே படத்தில் அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன் போன்றோர் நடிக்கிறார்கள். நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கும் இந்தப் படம் 400 கோடி பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக உருவாகிறதாம். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிற இது வரும் ஆண்டின் பொங்கலுக்கு வெளியாகும் என்கிறார்கள். அறிவியல் புனைகதையான இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க கமல்ஹாசனுடன் பேச்சு நடக்கிறதாம். இதில் நல்ல முடிவு எட்டப்பட்டுவிட்டால் முதன்முதலாக கமல் வில்லனாக நடிக்கிற செய்தியை அதி காரப்பூர்வமாக வெளியிட படக்குழுவினர் காத்திருக்கிறார்கள் என்கிறார்கள். எத்தனையோ வேடங்களை ஏற்றுவிட்ட கமலுக்கு இதுவொன்றும் புதிதாக இருக்காது என்றும் சொல்கிறார்கள்.