cinema

img

ரஷ்யா போகும் தமிழ்ப்படம்...

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான கைதி தமிழ்த் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். கடந்த 2019 அக்டோபரில் வெளியான இந்தப் படம் ரசிகர்களின் நல்ல வரவேற்பைப் பெற்றது. வசூலிலும் சாதனை படைத்த இந்தக் கைதி இப்போது ரஷ்யாவுக்குப் போகிறது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தியோடு நரேன், அர்ஜூன்தாஸ், பேபி மோனிகா போன்ற பலரும் நடித்திருக்கும் இந்தப் படத்தை உஸ்னிக் என்ற பெயரில் ரஷ்யாவின் 4 சீசன்ஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் அங்குள்ள 121 நகரங்களிலுள்ள 297 திரையரங்கங்களில் வெளியிட்டுள்ளது. வியாழனன்று ரஷ்யாவில் வெளியாகியுள்ள கைதி இந்தியிலும் அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகிவருகிறது. 

;