cinema

img

கடைசி விவசாயி... - சோழ. நாகராஜன்

ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் 2016இல் ரஜினியை வைத்து உருவாக்க எண்ணியிருந்த படம், அதன் பின்னர் 2018இல் விஜய் சேதுபதியைப் பிரதான பாத்திரத்தில் வைத்து துவக்கப்பட்டு இப்போதுதான் திரைக்கு வர இருக்கிறது. படத்தின் பெயர் கடைசி விவசாயி. விவசாயத்தின், விவசாயியின் பாடுகளை நகைச்சுவை கலந்து சொல்கிறதாம் படத்தின் கதை. இந்த பிப்ரவரியில் திரைக்கு வரப்போகிற இந்தக் கடைசி விவசாயியை காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற மாறுபட்ட படங்களைத் தந்த இயக்குநர் மணிகண்டன் இயக்கியுள்ளார். படத்தின் ஒளிப்பதிவையும் அவரே செய்துள்ளார்.  

பெயர் ஒருமாதிரி இருந்தாலும் படம் விவசாயிக்குப் பரிந்து பேசினால் மகிழ்ச்சி.