தனது மகள் சுஹானா கானுடன் திருப்பதி கோவிலுக்குச் சென்று ஷாருக்கான் சாமி தரிசனம் செய்த சம்பவம் பரபரப்பாகப் பேசப்பட்டு வரு கிறது. ஷாருக்கானுடன் பிரபல நடிகை நயன்தாராவும் திருப்பதி கோவிலுக்குச் சென்றார் என்பது கூடுதல் செய்தி. இந்த செப்டம்பர் 7 வியாழனன்று வெளியாகிய ஜவான் படத்தில் ஷாருக் கானும் நயன்தாராவும் நடித்திருக் கிறார்கள். இயக்குநர் அட்லீ இந்தப் படத்தை இயக்கியுள்ளார். மேலும் இதில் விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இசை அனிருத். இந்த ஜவான் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது. ஷாருக்கான் ரசிகர் களின் மிகுந்த எதிர்பார்ப்பை நிறைவு செய்வதாக இந்தப் படம் அமைந்திருக் கிறது என்கிறார்கள். இந்த ஜனவரியில் வெளியான ஷாருக்கானின் பதான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில் இந்த ஜவான் வெளிவந்துள்ளது. இஸ்லாமியரான ஷாருக்கானும், கிறிஸ்தவரான நயன்தாராவும் திருப்பதி கோவிலுக்குச் சென்ற நிகழ்வு நமது தேசத்தில் நிலவும் மத நல்லிணக்கச் சூழ லை நன்கு பிரதிபலிப்பதாக சினிமா ரசி கர்கள் பெருமிதத்தோடு பேசிவருகிறார்கள்.