cinema

img

சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' வெளியீடு ஒத்திவைப்பு!

சென்னை, மார்ச் 9 -
சிவகார்த்திகேயனின் ’டாக்டர்’ படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

'கோலமாவு கோகிலா' திரைப்பட இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் 'டாக்டர்' 
இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.
இத்திரைப்படம் மார்ச் 26ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், இத்திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதுகுறித்து கே.ஜே.ஆர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மார்ச் 26ஆம் தேதி படத்தை வெளியிட உற்சாகத்தோடு இருந்தோம். ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்கிறோம். புதிய தேதியை இன்னும் சில நாட்களில் அறிவிப்போம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளாது.

;