cinema

img

மம்மூட்டிக்கு ஆஸ்திரேலியா கௌரவம்

பிரபல மலையாள நடிகர் மம்மூட்டியை கௌரவிக்கும் விதமாக ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் அவரது படம் கொண்ட தபால்தலை வெளியிடப்பட்டது. ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றில் உறவை வளர்ப்பதற்காக ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ‘இந்தியாவின் நாடாளுமன்ற நண்பர்கள்’ குழு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் மம்மூட்டியின் உருவம் பதித்த 10 ஆயிரம் தபால் தலைகள் வெளியிடப்பட்டன. ஆஸ்திரேலிய நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய நாடாளுமன்ற நண்பர்கள் அமைப்பின் தலைவரும், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீசின் பிரதிநிதியுமான டாக்டர் ஆண்ட்ரூ சார்ல்டன் எம்.பி. வெளியிட ஆஸ்திரேலியாவுக்கான இந்தியத் தூதர் மன்பிரீத் வோரா முதல் தபால் தலையைப் பெற்றுக்கொண்டார்.