cinema

img

மீண்டும் களம் வரும் கரு.பழனியப்பன்... - சோழ. நாகராஜன்

பார்த்திபன் கனவு, சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம் முதலான படங்களை இயக்கி, மந்திரப்புன்னகை உள்ளிட்ட சில படங்களில் நடித்த இயக்குநர் கரு. பழனியப்பன் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ‘ஆண்டவர்’ எனும் படத்தை இயக்குகிறார்.  லிப்ரா புரொடக்சன் சார்பில் உருவாகும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நடிக - நடிகையர் இன்னமும் முடிவாகவில்லையாம்.  சின்னத் திரையில் சமூக - அரசியல் விசயங்களை விவாதங்கள் வாயிலாகக் கலக்கிவந்த நிலையில் கரு. பழனியப்பன் மீண்டும் திரைப்படமொன்றை இயக்க இருப்பது சினிமா வட்டாரத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

;