cinema

img

ஹூமா குரேஷி: ஜொலித்தாலும் பெண்ணே... - சோழ. நாகராஜன்

ரஜினி நடித்து வெளிவந்த காலா திரைப்படத்தின் வாயிலாகத் தமிழில் அறிமுகமானவர் ஹூமா குரேஷி. காலாவைத் தொடர்ந்து அஜித்தின் வலிமை படத்தில் நடித்தார். பாலிவுட்டில் தொடர்ந்து இந்தித் திரைப்படங்களில் நடித்துவரும் ஹூமா தனக்கெனத் தனி இடத்தை ரசிகர்களிடையே பெற்றவர். இவர் குறித்து பத்திரிகைகளில் வரும் விமர்சனங்கள் இவரை அவ மதிப்பதாக உள்ளதாக அண்மையில் கூறியுள்ளார்.  இவரது உடல் எடையை வைத்துப் பல்வேறு விமர்சனங்கள் வந்தனவாம். திரைப்படங்களைப் பார்ப்பதும் பார்க்காமல் இருப்பதும் அவரவர் விருப்பம். ஆனால், திரைப்படங்களை விமர்சிப்பதற்கு மாறாக நடிகர்களை அவதூறாகப் பேசுகிறார்கள். தனிப்பட்ட நபர்களை உருவக்கேலி செய்கிறார்கள். இப்படியான தனிநபர் தாக்குதல் கள் எனும் எதிர்மறைக் கருத்துக்கள் அவர்களைப் பாதிக்கவே செய்யும். எனவே, இவற்றைத் தவிர்க்க  வேண்டும் என்று அவர் மிகுந்த வருத்தத்துடன் சொல்லியிருக்கிறார்.  பாலிவுட்டில் ஜொலித்தாலும் ‘பெண் பெண்தான்’ என்ற பழைய ஆணாதிக்க சிந்தனையே எங்கும் நிலவுகிறது என்பதே இதன்மூலம் தெரிகிறது.