ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்ற சார்பட்டா பரம்பரை படத்திற்குப் பிறகு இயக்குநர் பா. ரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கியுள்ளார். அதற்குப்பின்னர் அவர் ஒரு இந்திப் படத்தை இயக்கவுள்ளார். ஜார்கண்ட் பழங்குடியினத் தலைவர் பிர்சா முண்டாவின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் பிர்சா என்கிற படம்தான் அது. சார்பட்டாவுக்கு முன்னரே பிர்சா முண்டா என்ற பெயரில் அவர் இயக்குவதாக இருந்ததுதான் இந்தப் படம். தற்போது இதனை நமாஹ் பிக்சர்ஸ் சார்பில் ஷரீன் மந்த்ரி, கிஷோர் அரோரா ஆகியோர் தயாரிக்கிறார்கள். இதில் கதாநாயகன் - நாயகி உள்ளிட்ட நட்சத்திரங்களின் பட்டியல் விரைவில் வெளிவரும் என்று தெரிகிறது.