கணக்கில் வராத பணத்தை வெளிநாடு களில் பதுக்கி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வெளியான ‘பனாமா பேப்பர்ஸ்’ பெயா் பட்டி யலில் பாலிவுட் திரைக் கலைஞர் ஐஸ்வர்யா ராயின் (48) பெயரும் இடம்பெற்றிருந்த நிலையில், அவரிடம் தில்லி அமலாக்கத் துறை அதிகாரிகள் திங்களன்று 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்து வெளியே வந்த ஐஸ்வர்யா ராயிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப முயன்றனர். ஆனால் அவா் பதில் எதுவும் அளிக்காமல் சென்று விட்டார்.