மிக அதிகமாகப் பேசப்பட்ட, அதிக வசூலை ஈட்டிய, இன்றுவரையில் புகழப்படுகிற பிரபல ஹாலிவுட்டின் டைட்டானிக் திரைப்படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன். அவதார் படத்தின் இயக்குநரும் அவர்தான். கனடாவைச் சேர்ந்த கேமரூன் திரைப்பட இயக்குநர் மட்டுமல்ல. தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியரும் ஆவார். அத்துடன் ஆழ்கடல் ஆய்வாளருமாவார். டைட்டானிக் படம் வெளிவந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதனை உலகம் முழுதும் 3 டி முறையில் மறுவெளியீடு செய்கிற முயற்சி நடந்துவருகிறது. இந்நிலையில் இந்தியத் திரைப்படங்களைத் தாம் மிகவும் விரும்பி ரசிப்பதாகப் பேட்டியொன்றில் அவர் கூறியுள்ளார். அவரது திரைப்படங்களுக்கும் இந்தியத் திரைப்படங்களுக்கும் உள்ள வித்தியாசமாக பாடல்களும் நடனக் காட்சிகளும் இருப்பதாகக் கூறியுள்ள அவர் குடும்பம், உறவினர் மற்றும் நணபர்களை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்தியத் திரைப்படங்களைத் தாம் மிகவும் ரசிப்பதாகக் கூறியுள்ளார். ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தினைக் கண்டு மிகவும் வியந்ததாகவும் ஜேம்ஸ் கேமரூன் கூறியுள்ளார்.