cinema

img

இது அரைத்த மாவையே மீண்டும் அரைப்பதுதானே..?

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 2002இல் வெளிவந்த ரஜினி படம் பாபா. ரஜினியே கதை, திரைக்கதை எழுதி, தயாரித்த இந்தப் படம் அன்றைக்கு ஓடாத படங்களின் வரிசையில் போய்ச் சேர்ந்துகொண்டது. தற்போது அதே படத்தை பட்டி, டிங்கரிங், பெயிண்டிங் செய்து மீண்டும் வெளியிடப் போகிறார்களாம். இது புதுசாவுல்ல இருக்கு... அவ்வளவா கதைப் பஞ்சம் தலைவிரித்தாடுது?  புதுப்பொலிவுடன் இதை உருவாக்கும் முயற்சியாக முற்றிலும் புதிதாக இதனை மறுதொகுப்புக்கு உட்படுத்துகிறார்களாம். நவீனத் தொழில்நுட்பத்தோடு கலர் கிரேடிங் செய்கிறார்களாம். ஒவ்வொரு ஃபிரேமையும் டிஜிட்டல்முறையில் மேம்படுத்துகிறார்களாம். பாடல்களை இதன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் டால்ஃபி ஒலியமைப்புக்கு ரீமிக்ஸ் செய்கிறாராம். விறுவிறுப்புக் கூட்ட படத்தில் இன்னும் சிறப்புச் சத்தங்கள் சேர்க்கப்படுகின்றனவாம். மொத்தத்தில் பட்டி, டிங்கரிங்தானே? அரைத்த மாவையே அரைப்பதுதானே?  ஆனால் கதை? அதே அறுதப் பழைய பல்லவிதானே? தமிழ் சினிமாவுக்கு இப்படியெல்லாமா சோதனை வரும்?

;