பெங்களூரு:
பெங்களூரு தெற்குத் தொகுதி எம்.பி.யாக இருப்பவர், தேஜஸ்வி சூர்யா. பாஜகவின் இளைஞர் பிரிவுக்கு தலைவராக இருக்கும் இவர், அண்மையில், ஜெயநகர் பகுதியிலுள்ள பெங்களூரு தெற்கு மண்டல முன்களப் பணியாளர் அலுவலகத்திற்கு (வார் ரூம்) சென்றார்.
பின்னர் அங்கு பணியாற்றும் 17 இஸ்லாமியர்களின் பெயர்களை மட்டும் ஊடகங்களுக்கு முன்பாக வாசித்துக் காட்டி, இவர்கள்தான் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை ஒதுக்கீட்டில் லஞ்சம் வாங்கிக் கொண்டு முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள் என்று குற்றம் சாட்டினார். மாநகராட்சி நிர்வாகமும் உடனடியாக அந்த17 இஸ்லாமிய ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியது.ஆனால், காவல்துறை நடத்திய விசாரணையில் இந்த 17 பேரும் முறைகேடு எதிலும் ஈடுபடவில்லை என்பது தெரியவந்தது. எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசின் நிர்வாக தோல்வியை மூடி மறைத்து,மக்களின் கவனத்தை திசைத்திருப் பவே இந்த மத ரீதியிலான பிளவுபடுத்துதல் முயற்சியில் தேஜஸ்வி சூர்யா ஈடுபட்டது வெளிச்சத்திற்கு வந்தது. காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட பல்வேறுஅரசியல் கட்சிகளின் கண்டனங்களுக்கு அவர் உள்ளானார்.
இதையடுத்து செய்தியாளர் களைக் கூட்டி, தேஜஸ்வி சூர்யா தன்னிலை விளக்கம் அளிக்க முயன்றார். ஆனால், அது அவருக்கே எதிராகத் திரும்பியது. பெங்களூரு செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் மவுனமாக நின்றும், உளறிக் கொட்டியும் அசிங்கப்பட்டுப் போனார்.இந்நிலையில், தேஜஸ்வி சூர்யாவின் இந்த செய்தியாளர் சந்திப்பு வீடியோவை, தனது டுவிட்டரில் பகிர்ந்த நடிகர் சித்தார்த், ‘பெங்களூர் தெற்கு, உருமாறிய வைரஸ் ரொம்பவே ஆபத்தானது’ என்றுதேஜஸ்வி சூர்யாவை சாடியுள் ளார். ரொம்பவே என்பதைக் குறிப்பதற்கு “தும்பா” என்ற கன்னட வார்த் தையையும் அவர் சேர்த்துள்ளார்.