cinema

img

இங்குள்ள ஆர்எஸ்எஸ்-ஸூம் ஆப்கன் தலிபான்களும் ஒன்றுதான்.... பாலிவுட் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் அதிரடி...

புதுதில்லி:
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலிபான் கள், இந்தியாவில் உள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பினர்; இவர்கள் இருவருமே ஒன்றுதான் என்று புகழ்பெற்ற பாலிவுட் சினிமா பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் கூறியுள்ளார்.

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு ஜாவேத்அக்தர் பேட்டி அளித்துள்ளார். அதில்,“உலகம் முழுவதும் உள்ள அனைத்துவலதுசாரி அமைப்புகளின் நோக்கமும்ஒன்றாகத்தான் இருக்கும். உதாரணத் திற்கு தலிபான் பயங்கரவாத அமைப்பைஎடுத்துக் கொள்ளுங்கள். தலிபானுக்கு இஸ்லாமிய நாட்டை உருவாக்க வேண்டும் என்பது இலக்கு. அதேபோல் இந்துக்களுக்கான நாட்டை உருவாக்க வேண்டும்என இங்கு சிலர் எண்ணுகின்றனர். தலிபான் அமைப்பினர் கொடூரமானவர்கள்; அவர்களது செயல்கள் கண்டிக்கத்தக்க வகையில் இருக்கும். அதேபோல்தான் ஆர்எஸ்எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் உள்ளிட்ட அமைப்புகளை ஆதரிப்போரும் இருப்பார்கள்” என்று அக்தர்குறிப்பிட்டுள்ளார்.அக்தரின் இந்தக் கருத்துக்கு, மகாராஷ்டிர மாநில பாஜக எம்எல்ஏ ராம் கடம்எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “சங் பரிவார்மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின்கொள்கைகளை பின்பற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கு ஜாவேத் அக்தரின் கருத்து, வலியையும், அவமதிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. தலிபான் அமைப்புடன் ஆர்எஸ்எஸ் அமைப்பை ஒப்பிட்டுப்பேசியதற்காக ஜாவேத் அக்தர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால், அவர்பாடல் எழுதும் படங்களை திரையிட அனுமதிக்க மாட்டோம்’’ என மிரட்டல் விடுத்துள்ளார்.