பெரிய முதலீட்டுப் படங்க ளான ஆர்ஆர்ஆர், வலிமை, ராதேஷ்யாம் போன்றவை பொங்கலுக்கு வெளிவருவ தாகச் சொல்லப்பட்டது. ஆனால், ஊரடங்கு உள்ளிட்ட கொரோனா அச்சத் தால் அவற்றை வெளியிடத் தயக்கம் காட்டப்படுகிற நிலையில் சிறிய முதலீட்டுப் படங்கள் சிலவற்றைத் துணிந்து திரைய ரங்குகளுக்குக் கொண்டுவர அவற்றின் தயாரிப்பு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. குறிப்பாக, கொம்புவச்ச சிங்கம்டா, நாய் சேகர் போன்ற படங்கள் இந்தப் பொங்கலுக்குத் திரைக்கு வருகின்றன. சதீஷ் நாயகனாக நடிக்கும் இந்த நாய் சேகரில் விலையுயர்ந்த லேப்ரடார் வகை நாயொன்றும் நடிக்கிறதாம். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழடைந்த பவித்ரா லட்சுமி இந்தப் படத்தின் நாயகியாம். பெரிய பட்ஜெட் படங்களோடு போட்டியிட முடியாத சிறிய முதலீட்டில் எடுக்கப்படும் படங்களை இதுபோன்ற நெருக்கடி நிலைகளைப் பயன்படுத்தித்தான் திரையரங்குகளில் வெளியிட இயலும் என்கிற நிலை எத்தனை அவலமானது!