இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 800 திரைப்படம் முன்பு ஒரு பேசு பொருளாக இருந்தது நினைவிருக்கலாம். விஜய் சேதுபதி அந்தப் படத்தில் முரளிதரனாக நடிக்க இருந்தபோது அதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இலங்கைத் தமிழரான முரளிதரன்மீது கடுமையான விமர்சனங்களை வைத்த வர்கள் விஜய் சேதுபதி அதில் நடிக்கக் கூடாது என்று குரல் எழுப்பினார்கள். அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி வில கிக்கொண்டார். அதன்பிறகு அந்தப் பட முயற்சி என்ன ஆனது என்று எவரும் யோசிக்கவில்லை. ஆனால், அது குறித்து எந்தத் தகவலையும் வெளி யிடாத படக்குழு முத்தையா முரளி தரனின் பயோபிக் திரைப்படத்தைத் தற்போது எடுத்து முடித்திருக்கிறது. இதில் ஸ்லம்டாக் மில்லியனர் படப்புகழ் நடிகர் மதுர் மிட்டல் முரளிதரனாக நடித்திருக்கிறார். அவரது இணையரான மதிமலராக மஹிமா நம்பியார் நடித்திருக் கிறார். இயக்குநர் வெங்கட் பிரபுவின் இணை இயக்குநர் 2010இல் கனிமொழி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுக மான ஸ்ரீபதி இந்தப் படத்தை இயக்கி யிருக்கிறார். இதன் டிரைலரை பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கடந்த செவ்வாயன்று மும்பையில் வெளியிட்டார். படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.