தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,480 உயர்ந்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. சென்னையில் தங்கம் விலை இன்று, காலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்த நிலையில், பிற்பகலில் மேலும் ரூ.680 உயர்ந்துள்ளது. 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,385க்கும், சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,425க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.75,400க்கும் விற்பனையாகிறது.
மேலும், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.170-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,70,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
