business

img

தங்கம் விலை ரூ.640 உயர்வு - இன்றைய நிலவரம்

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.600 உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் ரூ.640 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று (12-06-2025) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.72,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.80 உயர்ந்து ரூ.9,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.59,840-க்கும், கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.7,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.119-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,19,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.