business

img

வரி விதிக்காமல் மின்சாரம், குடிநீர் திட்டங்கள் வந்து விடுமா? பெட்ரோல் விலை உயர்வை நியாயப்படுத்தி பாஜக தலைவர் பேச்சு

புதுதில்லி:
இன்னும் 8 முதல் 10 ஆண்டுகளுக்கு பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புஇல்லை என்று பீகார் மாநில முன்னாள் துணை முதல்வரும், தற்போதைய மாநிலங்களவை பாஜக எம்.பி.யுமான சுஷில்குமார் மோடி கூறியுள்ளார்.

பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டிவரி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்துவருகின்றன. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் அடுத்த  ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதுதொடர்பாக விவாதிக் கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.இந்நிலையில், நாடாளுமன்றத்தில் நிதி மசோதா தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு பேசியிருக்கும் சுஷில் குமார் மோடி, பெட்ரோல் விலை குறையவாய்ப்பே இல்லை.. நாங்களே நினைத்தாலும் குறைக்கவே முடியாது என்று உண்மையைப் பேசியுள்ளார்.“பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்று பரவலாக கோரிக்கை விடுக்கப்படுகிறது. ஆனால்,ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருவதை எந்த மாநிலமும் விரும்பவில்லை.பெட்ரோலியப் பொருட்கள் மீது விதிக் கப்படும் வரிகள் மூலம் மத்திய - மாநில அரசுகளுக்கு ஆண்டுக்கு மொத்தம் ரூ. 5 லட்சம் கோடி வருவாய் கிடைக்கிறது. மாநிலங்களுக்கு மட்டும் ரூ. 2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கிறது. இதை விட்டுக் கொடுத்தால், வேறு எந்தவகையில் வருமானம் கிடைக்கும்? தற்போது, பெட்ரோலியப் பொருட்கள் மீது 60 சதவிகித வரி விதிக்கப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100 என்றால்,மத்திய அரசுக்கு 35 ரூபாயும், அந்தந்தமாநில அரசுக்கு 25 ரூபாயும் கிடைக்கிறது.மத்திய அரசுக்கு கிடைக்கும் 35 ரூபாயிலும் மாநில அரசுகளுக்கு 42 சதவிகிதத் தொகை அளிக்கப்படுகிறது.

ஆனால், பெட்ரோலியப் பொருட் களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தால், அதிகபட்ச ஜிஎஸ்டி வரிவிகிதமான 28 சதவிதம்தான் விதிக்க முடியும். அதாவது, லிட்டருக்கு 60 ரூபாய்க்கு பதிலாக 14 ரூபாய் மட்டுமே வரியாக வசூலிக்கமுடியும். அப்படியானால், மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை எப்படி ஈடு செய்வது?மேலும், பெட்ரோலியப் பொருட்கள் வரிமூலம் கிடைக்கும் வருவாய், அரசாங்கத் தின் பாக்கெட்டுக்கு செல்வதாக சிலர் சொல்கிறார்கள். அப்படியானால், மின்சாரம், வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர்போன்றவை வழங்க அரசுக்கு எங்கிருந்துபணம் வரும்? எனவே, இன்னும் 8 முதல்10 ஆண்டுகளுக்கு பெட்ரோலியப் பொருட்கள் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு
வரப்பட வாய்ப்பே இல்லை” என்று சுஷில்குமார் மோடி கூறியுள்ளார்.