புதுதில்லி:
கடந்த 2020-ஆம் ஆண்டில், கொரோனா கொள்ளைக்கு இடையிலும், பெட்ரோல் மற்றும் டீசல் மீதானகலால் வரியை ஒன்றிய அரசு கடுமையாக உயர்த்தியது. பெட்ரோல் மீதான கலால் வரி,லிட்டருக்கு 19 ரூபாய் 98 காசுகளிலிருந்து 32 ரூபாய் 90 காசுகளாகவும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 15 ரூபாய் 83 காசுகளிலிருந்து 31ரூபாய் 08 காசுகளாவும் உயர்த்தப் பட்டது.இதன்காரணமாக பெட்ரோல் - டீசல் மீதான கலால் வரி மூலமான வருவாய் ஒரே ஆண்டில் 88 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
ஒன்றிய பாஜக அரசே இதுதொடர்பான புள்ளிவிவரங்களை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.2019-20 நிதியாண்டில் பெட்ரோல் - டீசல் மூலமான வரி வருவாய் ரூ. 1 லட்சத்து 78 ஆயிரம் கோடியாக மட்டுமே இருந்த நிலையில், வரியை உயர்த்தியதால் சென்ற ஆண்டில் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. அதாவது, 2020-21 நிதியாண்டில் ரூ. 2லட்சத்து 13 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது. 2021-ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மாதங்களில்மட்டும் பெட்ரோல் - டீசல் மீதான கலால்வரி வசூல் ரூ. 1 லட்சத்து 01 லட்சம் கோடிகிடைத்துள்ளது. இதில் விமான எரிபொருள் மீதான வரி வருவாயும் அடங்கும்.எண்ணெய் மீதான விலை அதிகரிப்பு காரணமாக, 2020 ஏப்ரல் முதல்2021 மார்ச் வரை பெட்ரோல் மற்றும் டீசலில் இருந்து கிடைக்கும் கலால் வரியானது ரூ. 3 லட்சத்து 35 ஆயிரம்கோடியாக இருந்துள்ளது. இது 2019-20 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட இரு மடங்கு வசூல் ஆகும்.
நடப்பு 2021-22 நிதியாண்டில் இதுவரை பெட்ரோல் விலை 39 முறை மற்றும் டீசல் விலை 36 முறை அதிகரிக்கப் பட்டுள்ளது. பெட்ரோல் விலை ஒருமுறை குறைக்கப்பட்டுள்ளது. டீசலின்விலை இரண்டு முறை குறைக்கப்பட்டுஉள்ளது.இதுவே பெட்ரோல் விலை கடந்தநிதியாண்டில் 76 முறை உயர்த்தப்பட்ட போது, 10 முறை குறைக்கப் பட்டுள்ளது. டீசல் விலை 73 முறைஅதிகரிக்கப்பட்டு, 24 முறை குறைக்கப்
பட்டுள்ளது.