தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.3,000 குறைந்துள்ளது.
சென்னையில் இன்று (28-10-2025) ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை காலையில் ரூ.1,200 குறைந்த நிலையில், பிற்பகலில் மீண்டும் ரூ.1,800 குறைந்து ரூ.88,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை காலையில் ரூ.150 குறைந்த நிலையில், பிற்பகலில் மீண்டும் ரூ.2245 குறைந்து ரூ.11,075-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை சவரனுக்கு ரூ.2000 குறைந்து ரூ.73,600-க்கும், கிராமுக்கு ரூ.250 குறைந்து ரூ.9,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை மாற்றமின்றி ரூ.165-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
