business

img

தங்கம் விலை ரூ.2,560 உயர்வு!

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,560 உயர்ந்துள்ளது.
சென்னையில், தங்கத்தின் விலை ஒரு சவரன் இன்று காலையில் ரூ.640 உயர்ந்த நிலையில், பிற்பகலில் மேலும் ரூ.1,920 உயர்ந்து ரூ.1,14,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை காலையில் ரூ.80 உயர்ந்த நிலையில், பிற்பகலில் மேலும் ரூ.240 உயர்ந்து ரூ.14,270க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதை தொடர்ந்து, ஒரு கிராம் வெள்ளியின் விலை காலையில் ரூ.20 குறைந்த நிலையில், பிற்பகலில் ரூ.20 உயர்ந்து ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.3,00,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.