புதுதில்லி,மார்ச்.24- கார்களின் விலையை மீண்டும் உயர்த்தவுள்ளதாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அறிவித்துள்ளாது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த ஜனவரியில் கார்களின் விலை உயர்ந்த நிலையில் மீண்டும் வருகின்ற ஏப்ரல் முதல் கார்களின் விலையை அதிகரிக்கவுள்ளதாக ஆட்டொமொபைல் நிறுவனங்கள் அறிவித்துள்ளன
அதன்படி மாருதி சுஸூகி - 4%, கியா - 3%, மஹிந்திரா - 3%, ஹூண்டாய் - 3%ரெனால்ட் - 2%, BMW - 3%, மினி கூப்பர் - 3% வரை உயர்த்தவுள்ளதாக தற்போது வரை இந்த ஆட்டோமொபைல் நிறுவனங்கள் விலையேற்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றன.
மற்ற நிறுவனங்கள் ஏப்ரல் மாத ஆரம்பத்திற்கு விலையேற்ற அறிவிப்பை வெளியும் என எதிர்பார்க்கப்படுகிறது.